குன்னூரில் ஏலச்சீட்டு மோசடி: பாதிக்கப்பட்டோர் புகார்

குன்னூரில் ஏலச்சீட்டு மோசடி: பாதிக்கப்பட்டோர் புகார்
X

புகாரளிக்க வந்த பொதுமக்கள்.

ஏலச்சீட்டு நடத்தி வந்தவர் தலைமறைவானதால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

குன்னூர் ஓட்டுபட்டரை பகுதியில் வசித்து வந்தவர் அப்பாஸ் (45). இவர் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ஓட்டுபட்டரை, வள்ளுவர் நகர், வாசுகி நகர் உட்பட 11-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏல சீட்டு நடத்தி வந்தார். கடந்த சில வருடங்களாக சீட்டு நடத்தி வசூலித்து வந்து உள்ளார். மக்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்காமல் தலைமறைவானார்.

இந்த சம்பவம் அறிந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும். குன்னூர் காவல் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் புகார் அளித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!