நீலகிரியிலுள்ள பூங்காக்களுக்கு தரச்சான்று

நீலகிரியிலுள்ள பூங்காக்களுக்கு தரச்சான்று
X

தரச்சான்றிதழ்களை வழங்கும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.

நீலகிரி பூங்காக்களுக்கு உலக தரக்கட்டுப்பாட்டு கழகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டமானது உலக அளவில் இயற்கை வளத்துக்கும், சுற்றுலா வளத்துக்கும் பெயர் போனது. இம்மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையானது விவசாயிகளுக்கு நலன் பயப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் துறையாகவும் இருந்து வருகின்றது.

இம்மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் கட்டுப்பாட்டில் 5 பூங்காக்கள் மற்றும் 10 தோட்டக்கலைப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இவை சுற்றுலாத்தலங்களாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு தரமான நடவுப்பொருட்கள் விநியோகிக்கவும் பயிற்சி திடல்களாகவும் செயல்படுகின்றது.

தற்பொழுது தோட்டக்கலைத் துறையின் கட்டுபாட்டிலுள்ள அரசு தாவரவியல்பூங்கா, அரசு ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா மற்றும் அரசு தோட்டக்கலைப் பண்ணை,பர்லியார் ஆகியவை ISO எனப்படும் உலக தரக்கட்டுப்பாட்டு கழகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அழகியல் மற்றும் தொழில் நுட்ப மேலாண்மைக்காக உதகை, அரசு தாவரவியல் பூங்காவிற்கும், பல்வேறு வகையான ரோஜா ரகங்களின் தொகுப்பு மற்றும் வளர்ப்பிற்காக உதகை, அரசு ரோஜாபூங்காவிற்கும், அயல்நாட்டு தாவரங்கள் மற்றும் பல்வேறு தாவரங்களின் தொகுப்பாக விளங்குவதற்காக குன்னூர், சிம்ஸ் பூங்காவிற்கும், தரமான நடவு பொருள் உற்பத்தி மற்றும் விவசாயிகளுக்கான தொழில் நுட்ப தளமாக விளங்குவதற்கா பர்லியார், அரசு தோட்டக்கலைப் பண்ணைக்கும் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இச்சான்றிதழ்களை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி வாழ்த்துக் கூறினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil