கேரட் விலை உயர்வு : நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி
நீலகிரி மாவட்டம் குன்னூர், உதகை மற்றும் கோத்தகிரி பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றனர். காலநிலைக்கு ஏற்றவாறு கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் என விவசாயிகள் பயிர்செய்து வருகின்றனர்.
இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், விற்பனைக்காக மேட்டுப்பாளையம், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பபடுகிறது. குறிப்பாக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அதிகளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது, கேரட் பயிரிட்டு 5 முதல் 6 மாதம் வரை பயிர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் என அதிகளவில் செலவுகள் ஏற்படுவதால், சிறு குறு விவசாயிகள் கேரட் பயிரிட பெருமளவில் ஆர்வம் காட்டுவதில்லை. பல ஏக்கர் பரப்பில் நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமே அதிக பரப்பளவில் கேரட் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் மார்க்கெட் பகுதியில் கேரட் கிலோவிற்கு 60 முதல் 70 ரூபாய் வரை , விலை உயர்ந்து விற்பனையாகிறது. கூடுதல் விலை கிடைப்பதால், கேரட் சாகுபடி செய்துள்ள நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu