குன்னூரில் 200 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட கார்: மூவர் படுகாயம்

குன்னூரில் 200 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட கார்: மூவர் படுகாயம்
X

குன்னூர் மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட கார்.

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்தனர்.

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில் 21 இடங்களில் சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி சாலையின் இருபுறமும் ஜல்லிகற்கள் சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துக்குள்ளாகின்றன. இந்த நிலையில் பாய்ஸ் கம்பெனி பகுதியை சேர்ந்த கண்ணன் உதகை மகளிர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்று கண்ணன் மற்றும் அவரது மனைவி ஒட்டுநர் உட்பட 3 பேர் குன்னூரிலிருந்து காரமடைக்கு சொகுசு காரில் செல்லும்போது வளைவில் திருப்பும் போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து தூக்கி வீசப்பட்டு வனப்பகுதியை தாண்டி 200 அடியை தாண்டி ரயில்வே தண்டவாளத்தில் விழுந்தது.

இதில் மூவர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத்துறையின் மீட்டு குன்னூர் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குன்னூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!