கோத்தகிரியில் நூல் வெளியீட்டு விழா

கோத்தகிரியில் நூல் வெளியீட்டு விழா
X

கோத்தகிரியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா.

விழாவில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர் ஓய்வு பேராசிரியர் முனைவர் மு.மகாலிங்கம். நீதிநூல்கள், திருக்குறள்,பாரதியாரின் கவிதைகள் மற்றும் திரை இசைப் பாடல்கள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட எளிய வரிகளின் தொகுப்பின் அடிப்படையில் இவர் எழுதிய அனுபவ மொழிகள் என்னும் நூல் வெளியீட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.

இவ்விழாவில் முன்னாள் மாணவர்கள், மருத்துவர், ஆசிரியர்கள் மேலும் பல துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளாக இங்கு வந்து பங்கேற்றனர்.இவ்விழாவின் ஏற்பாடுகள் மிளிதேன் அரசு உயர்நிலைப்பள்ளி செய்திருந்தது. தலைமையாசிரியர் அரவிந்த், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜூ,ராஜி மற்றும் ஊர் தலைவர் பில்லன் முன்னிலையில் பேச்சு மேடை வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். விழாவில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future