குன்னூர் சாலையில் பூத்துக் குலுங்கும் ஸ்பேத்தோடியா மலர்கள்

குன்னூர் சாலையில் பூத்துக் குலுங்கும் ஸ்பேத்தோடியா மலர்கள்
X

குன்னூரில் சாலையோரம் பூத்துக்குலுங்கும் ஸ்பேத்தோடியா மலர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் ஸ்பேத்தோடியா மலர்கள், காண்போரை கவர்கின்றன.

இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் மலைகளுக்கு இடையே பூத்துக்குலுங்கும் பல வண்ண மலா்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன,

இவற்றில் மேட்டுப்பாளையம் முதல், குன்னூர் வரும் வழியில், மலைகளின் இரண்டு புறமும் பச்சை பசேல் என்றிருக்கும் தேயிலை தோட்டங்களுக்கு இடையில் 'ஸ்பேத்தோடியா' என அழைக்கப்படும் சேவல் கொண்டை மலர்கள் சீசன் தற்போது களை கட்டியுள்ளது. இந்த மலர்கள் சாலையில் பயணிப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.


மேலும், பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு இடையே சிவப்பு நிறத்தில் பூத்துள்ளன. இந்த மலா்கள் கொண்ட மரங்கள், ஆண்டுதோறும் டிசம்பா் முதல் பிப்ரவாி வரையிலும், ஆகஸட் முதல் அக்டோபா் வரையிலும் பூத்துக்குலுங்கும். சிவப்பு நிறத்தில் கொத்து கொத்தாய் மலா்ந்துள்ள இந்த மலா்களால், குன்னுார் மலைப்பாதை சிவப்பு கம்பளம் விாித்தது போன்று காட்சியளிக்கிறது.

ஐரோப்பிய கண்டத்தை பூர்வீகமாக கொண்ட இவ்வகை பூக்கள், ஆங்கிலேயர் காலத்தில், குன்னூரில் அதிகளவில் நடவு செய்யப்பட்டுள்ளது. இவ்வகை மரங்கள் மலேரியாவை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது என்பதால், இவை தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil