குன்னூர் அருகே கிராமத்தில் உலா வந்த கரடி: பொதுமக்கள் அச்சம்

குன்னூர் அருகே கிராமத்தில் உலா வந்த கரடி: பொதுமக்கள் அச்சம்
X

குன்னூர் அருகே கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வரும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் உலாவரும் கரடியால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

குன்னூர் அருகே கிராமத்தில் புகுந்து வீட்டின் கதவை தட்டும் கரடியால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கண்காணிப்பு கேமரா வில் பதிவு.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் சர்வ சாதாரணமாக உலா வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள ஜெகதளா கிராமத்தில் இரவு கரடி ஒன்று அங்கிருந்த வீட்டின் கதவை தட்டியது. மேலும் அருகில் உள்ள தெருவிற்கு சென்று அங்கும் வீட்டின் கதவை தட்டியுள்ளது. இந்த வீடியோ கிராமத்திலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. வனத்துறையின் கரடியை கண்கானித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story