குன்னூர் மஞ்சூர் சாலையில் கரடி நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

குன்னூர் மஞ்சூர் சாலையில் கரடி நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
X

குன்னூரில் இருந்து மஞ்சூர் செல்லும்சாலையில் உலா வந்த கரடி.

குன்னூர் மஞ்சூர் சாலையில் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் வாகனஓட்டிகள் இடையூறுசெய்ய வேண்டாமெனவனத்துறை தெரிவித்துள்ளது

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நாளுக்கு நாள் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும், சாலைகளிலும் சர்வ சாதாரணமாக உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், குன்னூரில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் கரடி உலா வந்தது. சிறிது தூரம் சாலையில் உலா வந்த கரடி அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்றது. இதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர். இரு சர்க்கர வாகனங்களில் செல்வோர் கவனமாக இயக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!