குன்னூரில் பட்டப்பகலில் குடியிருப்புக்குள் உலா வந்த கரடி

குன்னூரில் பட்டப்பகலில் குடியிருப்புக்குள்  உலா வந்த கரடி
X

அளக்கரை பகுதியில், குடியிருப்பு பகுதியில் நடமாடும் கரடி.

குன்னூர் அளக்கரை பகுதியில், பட்டப்பகலில் குடியிருப்பு வளாகத்தில் உலா வந்த கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள அளக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக, கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது. தேயிலை தோட்டங்களில் பதுங்கி இருக்கும் கரடிகள், அவ்வப்போது சாலையை கடந்து, சென்று வருகின்றன.

இந்நிலையில், அளக்கரை -குடியிருப்பு பகுதியில் தடுப்பு சுவற்றின் மீது கரடி ஒன்று, இன்று சர்வசாதாரணமாக உலா வந்தது. இக்காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், பலமுறை புகார் அளித்தும் வனத்துறையினர் கரடிகளை கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கைகளை, இதுவரை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!