நீலகிரி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம்

நீலகிரி குடியிருப்பு பகுதியில்  சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம்
X

குன்னூர் குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் மற்றும் 3கரடிகள் உலா வந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள கால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரியில், 3 கரடிகள் உலா வந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுத்து வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குன்னூர் கரிமரா ஹட்டி பகுதியில், சிறுத்தையும் , கரடியும் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றிரவு கரிமரா ஹட்டிக்கு செல்லும் சாலையில் இரண்டு சிறுத்தைகளும், மூன்று கரடிகளும் குடியிருப்பு பகுதியில் உலா வந்தன. அங்கு குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த உர மூட்டையை இழுத்து சென்றன.

கரடி, சிறுத்தைகளின் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுத்தை, மற்றும் கரடியின் நடமாட்டம் குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அங்குள்ள தேயிலை தோட்டத்திற்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் நடமாடும் கரடி, மற்றும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!