கோத்தகிரி மருத்துவமனைக்குள் புகுந்த கரடி - பீதியடைந்த நோயாளிகள்

கோத்தகிரி மருத்துவமனைக்குள் புகுந்த கரடி - பீதியடைந்த நோயாளிகள்
X

மருத்துவமனை வளாகத்தில் நடமாடிய கரடி.

கோத்தகிரி அருகே, தனியார் மருத்துவமனையில் கரடி புகுந்ததால் ஊழியர்கள், நோயாளிகள் அச்சமடைந்தனர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோத்தகிரி அருகே மிஷன் காம்ப்பவுண்ட் பகுதியில், 24 மணி நேரமும் செயல்படும் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. வனப்பகுதியை ஒட்டி இம்மருத்துவமனை அமைந்துள்ள நிலையில், வனப்பகுதியில் இருந்து காட்டு மாடு, சிறுத்தை,கரடி போன்ற வனவிலங்குகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள், சாலைகளில் உலா வருவது தற்போது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் மருத்துவமனை வளாகத்தில் கரடி ஒன்று உலா வந்தது. இதனால், நோயாளிகள் பீதிக்குள்ளாகினர். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மருத்துவமனை வளாகத்தில் கரடி உலா வந்த சம்பவம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!