மழைக்கு பஸ் ஸ்டாப்பில் தஞ்சமடைந்த கரடி
நீலகிரி மாவட்டத்தில் உதகை ,கூடலூர், பந்தலூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் நேற்று இரவு மிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் கடும் குளிர் நிலவியது. அவ்வாறு நிலவிய கடும் குளிர் காலநிலையால் கரடி ஒன்று தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறி கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட கன்னிகா நகர் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிழற்குடை கட்டிடத்தில் பதுங்கியது.
அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், வாகனம் மூலம் கரடி அருகே சென்று பேருந்து நிலைய கட்டிடத்தில் பதுங்கியிருந்த கரடியை மீண்டும் தேயிலை தோட்டத்திற்குள் விரட்டினர். மழை, குளிருக்கு பயந்து கரடி ஒன்று பேருந்து நிழற்குடைக்குள் பதுங்கியது காட்சி சமூக வலைதளங்களில் பரவலாக பரவி
வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu