கோத்தகிரியில் உணவு தேடி குப்பைத் தொட்டிக்கு வந்த கரடி, சமூக ஆர்வலர்கள் வேதனை

கோத்தகிரியில் உணவு தேடி குப்பைத் தொட்டிக்கு வந்த கரடி, சமூக ஆர்வலர்கள் வேதனை
X

கோத்தகிரியில் குப்பை மேட்டில் நாயுடன் சேர்ந்து உணவு தேடும் கரடி

கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் குப்பைத் தொட்டியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உணவாக கரடி சாப்பிடும் காட்சி சமூக ஆர்வலர்களை வேதனையடைய செய்துள்ளது.

கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. தேயிலை தோட்டங்களில் அதிகமாக உலாவும் கரடிகளால் தோட்டத் தொழிலாளர்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.


இந்நிலையில் கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் குப்பைத்தொட்டியில் உணவைத் தேடி கரடி ஒன்று உலா வந்தது வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் வேதனையை அளித்துள்ளது.

உணவுகளை தேடி வந்த கரடி பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்சி அனைத்து தரப்பினரிடையேயும் வேதனையை அளித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்