கோத்தகிரியில் கூண்டில் சிக்கியது கரடி - மக்கள் நிம்மதி

கோத்தகிரியில் கூண்டில் சிக்கியது கரடி  - மக்கள் நிம்மதி
X

மிளிதேன் கிராமத்தில் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட கரடி.

கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன், கேர்கம்பை, இந்திரா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்டங்களில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. ஒரு மாத போராட்டத்திற்கு பின்னர், கிராமத்தின் நடுவே வைக்கப்பட்ட இரும்பு கூண்டில் பழங்கள் முதலான உணவுப்பொருட்கள் வைத்து கண்காணித்து வந்த னர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை கரடி கூண்டிற்குள் சிக்கியது. இதுபற்றி, வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா தலைமையில், வனத்துறையினர், அதிவிரைவு வன காவலர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கூண்டிற்க்குள் சிக்கிய கரடி, அதிக சத்தம் எழுப்பியும், கூண்டை சேதப்படுத்தியும் தப்பிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. எனினும், கூண்டின் மேல் பெரிய கற்கள், கட்டைகளை வைத்து கரடியை கூண்டை விட்டு வெளியே வராதவாறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்பு வனத்துறை மூலம் மாற்று கூண்டு கொண்டு வரப்பட்டு, பெரும் போராட்டத்திற்கு பின்னர், கரடியை அவலாஞ்சி அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil