குன்னூர் அருகே பள்ளி கதவை உடைத்த கரடி

குன்னூர் அருகே பள்ளி கதவை உடைத்த கரடி
X

கதவை உடைத்து உணவு பொருட்களை சேதப்படுத்திய கரடிகள்.

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி கதவை உடைத்து உணவு தேடும் கரடிகளால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகளின் சேட்டைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரவு நேரத்தில் உணவு தேடிவரும் கரடிகள், சத்துணவு பொருட்கள் வைக்கும் அறைகளின் கதவுகளை உடைத்து அரிசி முட்டை எண்ணை போன்ற பொருட்களை சாப்பிட்டும் சேதபடுத்தியும் வருகின்றது.

இந்நிலையில் நேற்று இரவு சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியின் கதவுகளை உடைத்து சேதபடுத்தியுள்ளது. இப்பள்ளியில் இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வனத்துறையினர் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து விரட்டவேண்டும் என்பது பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையாகும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!