குன்னூரில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை; கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்ட நிர்வாகம் தரப்பில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை குறித்து வைக்கப்பட்ட அறிவிப்பு பேனர் ( கோப்பு படம்)
Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், பாட்டில், பிளாஸ்டிக் வாழை இலைகள், தோரணம்-கொடிகள் உள்ளிட்ட 19 வகை பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், முதுமலை உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா தலங்களாக இருப்பதால், சீசன் காலகட்டத்தில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், இங்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஸம்மர் சீசனில் இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை, பல லட்சங்களாக உள்ள நிலையில், மாவட்டத்தின் தூய்மையை பாதுகாக்கவும், இயற்கை சூழலை பராமரிக்கவும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனாலும் இதனை பெரும்பாலான வியாபாரிகள் தடை விதித்தலை மதிக்காமல், விதி மீறி அலட்சியமாக செயல்படுவதாக புகார்கள் வந்தன. எனவே வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தி, அங்கு சிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார். தலைமையில் தாசில்தார் கனிசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் அடங்கிய குழுவினர், ஆப்பிள் பி பகுதியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு உள்ள பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் ஆகியவை இருப்பது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடை மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பிறகு வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை விற்கவோ பயன்படுத்தவோ கூடாது. அப்படியான செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu