குன்னூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை துவங்கியது

குன்னூரில் தனியார் தன்னார்வ அமைப்பு சார்பாக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து, பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்புடன் ,ஆக்ஸிஜன் உட்பட பல்வேறு வசதிகளுடன் கூடிய ஆட்டோ வடிவிலான 6 மினி ஆம்புலன்ஸ்கள், ராதிகா சாஸ்திரி என்னும் தன்னார்வலர் சார்பாக, குன்னூர் மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர், இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தனர். அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட மாநில தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக சுமார் 500 பேருக்கு தனியார் பள்ளி வளாகத்தில் அரிசி, மற்றும் பருப்பு, சமையல் எண்ணெய் அடங்கிய தொகுப்பினை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, குன்னுார் ஒட்டுப்பட்டரையில் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு அரிசி தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings