லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
X

ஊட்டி அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில்,கோத்தகிரி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராஜ் தலைமையிலான போலீசார் கோத்தகிரி நகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஓரசோலை பகுதியை சேர்ந்த தங்கராஜ் (53), ஒன்னரை கிராமத்தை சேர்ந்த காந்திகணேஷ்(52),கேர்பெட்டா பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (54) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளும் ரூ.9200 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!