குன்னூர் ராணுவ மையத்திற்கு முப்படை தளபதி வருகை

குன்னூர் ராணுவ மையத்திற்கு முப்படை தளபதி வருகை
X

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு வருகை தந்த விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி.

விமானப்படை எதிர்கொள்ளும் ஆயுதப் படைகளின் முன்னேற்றம் ஊன்றுகோலாக இருக்கவேண்டுமென அதிகாரிகளிடையே உரை.

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி வருகை தந்தார். அவர் 77-வது பாடப்பிரிவு அதிகாரிகளுடன் உரையாற்றினார். அப்போது தேசிய பாதுகாப்பு சவால்கள் குறித்து விவரித்தார். விமானப்படை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள், ஆயுதப் படைகளின் முன்னேற்றம் மற்றும் முன்னேற்றத்திற்கான ஊன்றுகோலாக இருக்க வேண்டும் என அனைத்து அதிகாரிகளையும் அறிவுறுத்தினார்.

முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் ராணுவ கல்வியில் புதிய பாடங்களை இணைத்துக்கொள்வது மற்றும் நடப்பு பயிற்சி நடவடிக்கைகள் குறித்தும், கல்லூரியில் பயிற்சி முறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும் தளபதிக்கு கல்லூரி முதல்வர் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன் விளக்கினார். அவர், கல்லூரியின் உயர்தர பயிற்சி மற்றும் உள்கட்டமைப்புகளை பாராட்டினார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்