கோத்தகிரியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது.

கோத்தகிரியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது.
X
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி உயிலட்டியில் 260 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை பறிமுதல் செய்த போலீசார். ஒருவர் கைது

கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி பேட்டலாடா கிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் அருண் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக 260 லிட்டர் ஊறல் போட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதை போலீசார் பறிமுதல் செய்து அதே பகுதியில் கொட்டி அழித்தனர். இதனையடுத்து சாராயம் காய்ச்ச ஊறல் போட்டு வைத்திருந்த கோபால் என்பவரது மகன் அரசு(42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இவர் ஏற்கனவே கடந்த 15 நாட்களுக்கு முன் சாராயம் காய்ச்ச முயன்ற குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு அரசுவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!