குன்னூரில் நடுவழியில் நிறுத்தப்பட்ட மலை ரயில்

குன்னூரில் நடுவழியில் நிறுத்தப்பட்ட மலை ரயில்
X

Nilgiri News, Nilgiri News Today- ஊட்டி மலை ரயில் (கோப்பு படம்)

Nilgiri News, Nilgiri News Today- தண்டவாளத்தில், மரம் முறிந்து விழுந்ததால், குன்னூர் சென்ற மலை ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் பயணம் சென்று வருகின்றனர். அடர்ந்த வனங்கள் நிறைந்த, இயற்கை எழில் கொஞ்சும் கண்டுகளித்தபடி செல்ல, மலை ரயில் பயணமே மிக சிறந்ததாக இருக்கிறது. எனவே, மலை ரயிலில் பயணித்து, இயற்கை காட்சிகளை ரசித்து மகிழ பலரும் விரும்பி, மலை ரயிலில் பயணிப்பது வழக்கமாக உள்ளது. குறிப்பாக சீசன் காலகட்டத்தில், மலை ரயிலில் பயணிக்க டிக்கெட் கிடைப்பதே, பெரிய ஜாக்பாக் போல கருதப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களையெல்லாம் காண யுனெஸ்கோவிடம் ‘பாரம்பரிய’ அந்தஸ்தை பெற்ற நீலகிரி மலை ரயில் மூலமே அதிகமான சுற்றுலா பயணிகள் உதகை வருகின்றனர். அடர்ந்த காடுகளின் நடுவே வளைந்து நெளிந்து வரும் இந்த ‘குட்டி’ ரயிலில் பயணிக்க நம் நாட்டை சேர்ந்தவர்களை விட வெளி நாட்டவர்களே அதிகம் விரும்புகின்றனர்.

இந்நிலையில், அந்த மலை ரயில் இன்று காலை குன்னூரில் இருந்து புறப்பட்டது. அப்போது வெலிங்டன் பகுதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனை தற்செயலாக பார்த்த ரயில்வே ஊழியர்கள், உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். எனவே குன்னூரில் இருந்து புறப்பட்ட மலை ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீட்புபடை ஊழியர்கள் உடனடியாக, தண்டவாளத்தில் மரம் விழுந்து கிடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு தண்டவாளத்தில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினா். அதன்பிறகு மலை ரயில், ஒரு மணி நேரம் தாமதமாக ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.

இதுபோன்ற மலை ரயில் செல்லும் தண்டவாள வழித்தடங்களில், மரக்கிளைகள் முறிந்து விழுவது அடிக்கடி நடப்பதுதான் என்றாலும், உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் படை ஊழியர்கள் அங்கு வந்து மரத்தை வெட்டி அகற்றிய பின், ரயில் இயக்கப்படுகிறது. இதுபோன்ற நேரங்களில், ஒரு மணி நேரத்துக்கு மேல், ரயில் பயணம் தாமதமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!