மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் அரசு; குன்னூரில் அமைச்சர் பெருமிதம்
Nilgiri News, Nilgiri News Today- குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டம், குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது, தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், இலவச பஸ் பயண அட்டை, விலையில்லா சைக்கிள்கள் என பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பள்ளிகளில் இருக்கக் கூடாது என்பதற்காக ஏராளமான திட்டங்கள் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 10,663 பள்ளி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில், இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 387 தன்னார்வலர்களை கொண்டு முதியோர் கல்வி 498 நபர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செப்டம்பர் 16, 2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 63 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 227 பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 12, 208 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.மேலும் நீலகிரி 2022-2023-ம் கல்வியாண்டில் 1737 மாணவர்களுக்கு, 2434 மாணவிகளுக்கு என மொத்தம் 4171 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கீதா, குன்னூர் நகர்மன்ற தலைவர் ஷீலாகேத்ரின், குன்னூர் நகர்மன்ற துணைத்தலைவர் வாசிம்ராஜா, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷண குமார், குன்னூர் தாசில்தார் கனிகசுந்தரம், குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் மேரி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu