நீலகிரி மாவட்டம் முழுவதும் 240 முகாம்கள் மற்றும் 20 நடமாடும் தடுப்பூசி முகாம்கள்

நீலகிரி மாவட்டம் முழுவதும் 240 முகாம்கள் மற்றும் 20 நடமாடும் தடுப்பூசி முகாம்கள்
X
மாவட்டம் முழுவதும் நடந்த முகாமில் மொத்தம் 6,878 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் நிலையான 240 முகாம்கள் மற்றும் 20 நடமாடும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல் தவணை தடுப்பூசி 45 வயதுக்கு மேல் உள்ள 405 பேர், 18 வயது முதல் 44 வயது வரை 748 பேர், 15 வயது முதல் 18 வயது வரை 730 பேர் மொத்தம் 1,883 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரண்டாவது தவணை 45 வயதுக்கு மேல் உள்ள 2,514 பேர், 18 வயது முதல் 44 வயது வரை 2,481 பேர் என மொத்தம் 4,995 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில் மொத்தம் 6,878 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!