உதகை அருகே ஆடு திருடர்கள் 2 பேர் கைது

உதகை அருகே ஆடு திருடர்கள் 2 பேர் கைது
X

பைல் படம்.

கைது செய்யப்பட 2 இளைஞர்களிடம் இருந்து 5 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளான கீழ்குந்தா, மஞ்சூர் பஜார், ஒணிக்கண்டி, பிக்கட்டி உள்ளிட்ட இடங்களில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் திருட்டு போனதாக அதன் உரிமையாளர்கள் மஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் உதகை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சூர்யா மேற்பார்வையில் மஞ்சூர் போலீசார் ஆடு திருடர்களை தேடி வந்தனர்.

மஞ்சூரில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மஞ்சூர் சிவசக்தி நகரை சேர்ந்த யோகேஸ்வரன் (21), வினோத் (19) ஆகிய 2 பேர் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 5 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் ஆடு திருடிய 2 வாலிபர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்