/* */

ரூ. 5 கோடி மதிப்பில் குன்னூரில் கழிவுநீர் பரவலாக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம்

குன்னூரில், 5 கோடி ரூபாய் மதிப்பில் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஆறுகள் மற்றும் ஓடைகளில் கழிவுநீர் அதிகளவில் செல்கின்றன. இதனால், சில குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில் கழிவுநீர் வடிகால் வாரிய வல்லுநர்கள், குன்னூர் நகரில் உள்ள கழிவுநீரைச் சுத்திகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக, குன்னூர் உள்ள 30 வார்டுகளுக்கு உட்பட்ட 21 ஓடைப்பகுதிகளில், கழிவுநீரை சேகரித்து, அதனை ஆய்வு மேற்கொள்வதற்காக கழிவுநீர் வடிக்கால் வாரிய அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். இந்த சோதனை வெற்றி அடைந்த பின்னர், அனைத்து கழிவுநீர் குழாய்களையும் ஒன்றாக இணைத்து, குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு அருகில் 5 கோடி ரூபாய் மதிப்பில் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 6 July 2021 10:27 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  4. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  5. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  6. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  10. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!