ஆவணங்களின்றி எடுத்து சென்ற 2 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்து சென்ற 2 லட்சம் பறிமுதல்
X

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இரண்டு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இரவு, பகல் வேளைகளில் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த குஞ்சப்பனை சோதனைசாவடியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒருவரிடம் இருந்து ரூ. 70,000 பணம் , அதே போல் கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் சுமார் ரூ. 1,46,000 கணக்கில் வராத பணமும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் எப்படி வந்தது ? எங்கு கொண்டு செல்ல படுகிறது என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு