குன்னூரில் நடமாடும் காய்கறி வண்டிகளை துவக்கி வைத்த அமைச்சர்

குன்னூரில் நடமாடும் காய்கறி வண்டிகளை துவக்கி வைத்த அமைச்சர்
X
அதிக விலைக்கு விற்பனை செய்தால் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம் அமைச்சர் பேட்டி

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை விநியோகிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மாநில வனத்துறை அமைச்சர் K. ராமச்சந்திரன் கூறினார்.

குன்னூரில் இன்று நடமாடும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை வாகன சேவையை தொடங்கி வைத்து பேசிய அவர், மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 35 ஊராட்சி பகுதி மக்களுக்கு தடையின்றி காய்கறி மற்றும் பழங்கள் கிடைக்கின்ற வகையில் 268 வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

காய்கறி மற்றும் பழங்களின் விலைப் பட்டியல் வாகனங்களின் முன்புறம் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அதிக விலைக்கு விற்பனை செய்தால் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம் என்றார்.

முழு ஊரடங்கு காலத்தில் மக்களின் பாதுகாப்பு கருதி அரசு இந்த சேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும், பொதுமக்கள் இதை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Next Story
ai in future agriculture