குன்னூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வேட்பு மனு

குன்னூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வேட்பு மனு
X
மேளதாளங்கள் முழங்க கூட்டணி கட்சிகளுடன் அதிமுக வேட்பாளர் பேரணியாக சென்று வேட்பு மனு அளித்தார்.

குன்னூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கப்பச்சிவினோத் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக பட்டாசுகள் வெடித்து, மேளதாளங்கள் முழங்க ஏராளமான கழக நிர்வாகிகள் பாஜக உட்பட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வரவேற்பு அளித்தனர்.

இதில் குன்னூர் பேருந்து நிலையம் வரை அதிமுகவின் மாபெரும்பேரணி நடைபெற்றது. பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் ரஞ்சித்சிங்கிடம் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்து,உறுதிமொழி எடுத்துக்கொண்டார். உடன் குன்னூர் எம்.எல்.ஏ சாந்தி ஏ.ராமு, நகர அதிமுக செயலாளர் சரவணகுமார், முன்னாள் எம்பி. அர்ஜுனன் உள்பட ஏராளமானோர் சென்றனர்.

Tags

Next Story
smart agriculture iot ai