வேட்பாளருக்கு வரவேற்பு- போலீசுடன் திமுக வாக்குவாதம்

வேட்பாளருக்கு வரவேற்பு- போலீசுடன் திமுக வாக்குவாதம்
X

குன்னுாா் தொகுதி திமுக வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு பேண்டு வாத்தியங்களுடன் திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். போலீசாா் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக திமுகவினா் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிாி மாவட்டத்தில் குன்னுாா் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான ராமச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கபட்டுள்ளாா் ,குன்னுாாில் அண்ணா சிலை அருகே வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. முன்னதாக திமுக சார்பில் பேண்டு வாத்தியங்களுடன் திமுகவினா் படுகா் நடனம் ஆடி ஊா்வலமாக பஸ்ஸ்டாண்ட் வரை வேட்பாளா் ராமச்சந்திரனையும் மற்றும் கூடலுார் சட்டமன்ற தொகுதி வேட்பாளா் காசிலிங்கத்தையும் திமுக வினா் உற்சாகத்துடன் அழைத்து வந்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை தாங்கினாா். பின்னா் கட்சி நிா்வாகிகள் வேட்பாளா்களுக்கு வாழ்த்து தொிவித்தனா் . நேற்று அதிமுக வேட்பாளா் வரவேற்பு கூட்டத்திற்கு போலீசாா், வாகனங்கள் செல்ல தடை விதித்திருந்தனா். ஆனால் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு போலீசாா் வாகனங்களை அனுமதித்ததால் போலீசாா் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக திமுகவினா் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!