குடியிருப்பு பகுதியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

குடியிருப்பு பகுதியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
X

நீலகிரி மாவட்டம் குன்னூர் குடியிருப்பில் குளியலறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னூர் வெலிங்டன் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இன்று இவரது குழந்தை குளியலறைக்கு செல்லும் போது மேற்கூரையில் பாம்பு ஒன்று இருந்துள்ளதை கண்டு வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். உடனே அங்கு சென்று பார்க்கும் போது பாம்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே குன்னூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் குளியலறைக்குள் புகுந்த பாம்பை சுமார் அரை மணி நேரம் போராடி பிடித்தனர். பிடிபட்ட பாம்பு சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். குளியலறைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!