சிறுத்தை பலி- வனத்துறை விசாரணை

சிறுத்தை பலி- வனத்துறை விசாரணை
X

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இறந்த நிலையில் தேயிலை எஸ்டேட்டில் சிறுத்தை உடல் கிடந்தது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே புடியங்கி கிராமத்தில் தேயிலை பறிக்க தொழிலாளர்கள் அவ்வழியாக சென்ற போது துர்நாற்றம் வீசியுள்ளது.தொடர்ந்து அருகில் சென்று பார்த்த போது சிறுத்தை ஒன்று இறந்திருப்பதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் புடியங்கி சென்று பார்த்தபோது சிறுத்தை இறந்து கிடப்பது தெரியவந்தது.இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, 10 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒரு வாரம் முன்பு இறந்துள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின் சிறுத்தை இறந்ததற்கு காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்