தேயிலை தூளுக்கு சராசரி விலை நிர்ணயம்

தேயிலை தூளுக்கு சராசரி விலை நிர்ணயம்
X

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு கிலோ 21 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய செயல் இயக்குனர் அறிவித்துள்ளார்.

இது குறித்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2015ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட தேயிலை சந்தை கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் மாதம்தோறும் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி பச்சைத் தேயிலைக்கு இந்த மாத சராசரி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூபாய் 21.05 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது .கடந்த மாதம் நடந்த தேயிலை ஏலத்தில் சிடிசி தேயிலை தூளின் விற்பனை விலையை கருத்தில் கொண்டு இந்த சராசரி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சராசரி விலையை நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பச்சை தேயிலைக்கு சரியான முறையில் விலை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!