குன்னூரில் தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம்

குன்னூரில் தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம்
X

குன்னூரில் பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில்வே காலனி பகுதியில் குடியிருக்கும் கல்லூரி மாணவர் தாமஸ் என்பவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். குன்னூர் ஊட்டி சாலையில் பாலவாசி பெட்ரோல் பங்கில் தனது இருச்சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு இருச்சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது இருச்சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பங்க் ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.

ஆனால் தீ அணையாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்னூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் குன்னூர் ஊட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!