திருச்சி பணிமனைக்கு செல்லும் மலைரயில்

திருச்சி பணிமனைக்கு செல்லும் மலைரயில்
X
குன்னூரில் இருந்து பொன்மலை பணிமனைக்கு, பழைமை வாய்ந்த இன்ஜின் கொண்டு செல்லப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி - குன்னூர் மற்றும் குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் சுற்றுலா பயணிகள் மத்தியில பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் நீராவி இன்ஜின்களால் இயக்கப்பட்ட ஊட்டி மலை ரயில் இன்ஜின் பர்னஸ் ஆயில் இன்ஜின்களாக மாற்றம் செய்யப்பட்டது. மேலும் ஊட்டி குன்னூர் இடையே டீசல் இன்ஜின்கள் மூலம் இயக்கப்பபட்டு வருகிறது.

ஊட்டி மலை ரயிலுக்காக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இன்ஜின்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து அனுப்பப்பட்டன. அந்த இன்ஜின்கள் மலை ரயிலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குன்னூர் மலை ரயில் என்ஜின் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் ஊட்டி மலை ரயில் இன்ஜின் 37391 எண் கொண்ட 1949 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இன்ஜின் நிலக்கரிக்கு பதில் மாற்றம் செய்யப்பட்டு பர்னஸ் ஆயில் கொணடு இயக்கப்பட்டு வருகிறது.

இந்த இன்ஜின் பராமரிப்பு பணிக்காக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த இன்ஜினை இரு பெட்டிகளுக்கு நடுவில் இணைத்து மேட்டுப்பாளையம் சென்றது. பணிமனையில் இன்ஜினை பராமரிப்பு பணி முடிந்த பிறகு விரைவில் புதுப்பொலிவுடன் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil