தூய்மை இந்தியா பணியில் மாணவிகள்

தூய்மை இந்தியா பணியில் மாணவிகள்
X
குன்னூரில் தூய்மை இந்தியா திட்டமாக தேச தலைவர்களின் சிலைகளை தேசிய மாணவர் படை சார்பில் மாணவிகள் தூய்மை படுத்தினர்.

இந்தியா முழுவதும் தேசிய இயக்கமாக தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்பட்டு வருகிறது . மக்கள் இயக்கமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியடிகளின் கனவு நனவாக வேண்டும் என்றும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நம் நாட்டின் தூண்களாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், காந்தி ,நேரு, ஆகியோரின் சிலைகளை தூய்மைப்படுத்தும் பணியில் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கல்லூரி தேசிய மாணவர் படையின் தலைவியாக சிந்தியி ஜார்ஜ் தலைமையில் 15 பேர் கொண்ட மாணவிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!