குன்னூர் செல்போன் கடையில் திருட்டு

குன்னூர் செல்போன் கடையில் திருட்டு
X
குன்னுார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மொபைல் கடையில்3 லட்சம் மதிப்பிலான செல்போன்களை சுவற்றை துளையிட்டு கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகே ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகிறது இந்த பகுதி பகல் மற்றும் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணபடும் .


இந்த நிலையில் தனியார் மொபைல் போன் கடையில் சில நாட்களாகவே நோட்டம் இட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் சுவற்றை துளையிட்டு கடைக்குள் புகுந்து, விலையுயர்ந்த மொபைல் போன்களை திருடி செல்லும் CCTV காட்சிகள் கடையில் கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் அங்கிருந்த கைரேகைகளை பதிவு செய்து CCTV கேமராவின் பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் காவல் துறை சார்பில் குன்னூரில் பல்வேறு பகுதியில் பொருத்தபட்ட CCTV கேமராக்கள் பழுதாகி உள்ளதால் திருட்டு சம்பவங்கள் குன்னூர் பகுதியில் நாளுக்குநாள் அதிகரித்து உள்ளது. எனவே, இதனை சீரமைக்க வேண்டும் என்றும், இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்றும் வியாபாரிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி