குன்னூரில் மீண்டும் படகு சவாரி துவக்கம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 11 மாதங்கள் கழித்து மீண்டும் படகு சவாரி துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குன்னூர் சுற்றுவட்டாரத்தில் பறவைகள் அதிகளவில் காணப்படும் பகுதி சிம்ஸ் பூங்கா ஆகும். இங்கு நூற்றாண்டு பழமையான மரங்கள், செடிகள் அதிகமாக உள்ளன. ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பூங்காக்கள் பூட்டப்பட்டது.
இதில் குன்னூர் சிம்ஸ் பூங்காவிலும் படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மீண்டும் படகு சவாரி துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாபயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி இன்று முதல் அங்கு படகு சவாரி துவங்கப்பட்டது. 11 மாதங்கள் கழித்து படகு சவாரி துவங்கியது சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu