காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு
X

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 20 ம் தேதி மாயமான ஜார்கண்ட் மாநில சிறுமி 26 நாட்களுக்கு பின் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை பகுதியில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லெட்சுமணன்,சோமன் குமாரி தம்பதியரின் 8 வயது மகள் கடந்த டிச.20 ம் தேதி மாயமானார். சிறுமியை எங்கு தேடியும் கிடைக்காததால் லெட்சுமணன், கொலக்கம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து கடந்த 26 நாட்களுக்கும் மேலாக தடயஅறிவியல் நிபுணர்கள் குழு மற்றும் போலீசார் தனிப்படை குழு அமைத்து நான்கு குழுக்களாக பிரிந்து அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்கள், ஆறு, பூட்டப்பட்ட வீடுகள்,வனப்பகுதியில் தேடி வந்தனர்.

இந்நிலையில் கிரேக்மோர் அருகில் உள்ள தனியார் எஸ்டேட்டில் பாழடைந்த கிணற்றில் இருந்து சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் குன்னூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!