கோடநாடு வழக்கு : தனிப்படை போலீஸார் கோத்தகிரி பகுதியில் தீவிர விசாரணை

கோடநாடு வழக்கு : தனிப்படை போலீஸார் கோத்தகிரி பகுதியில்  தீவிர விசாரணை
X

கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் தனிப்படைபோலீஸார் மேற்கொண்ட விசாரணை

கோடநாட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக இருந்த தினேஷின் சகோதரியிடம் போலீசார் விசாரணை

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மறு விசாரணை, தற்போது காவல்துறை மூலம், ஐந்து தனிப்படைகள் அமைத்து, கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வழக்கு சம்பந்தமாக அதாவது முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், ஜம்சீர் அலி மற்றும் சில முக்கிய சாட்சிகளான கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் கனகராஜனின் சகோதரன் தனபால், மனைவி , மைத்துனர், நண்பர்கள் மற்றும் வழக்கில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் இவர்களுக்கு வாகன உதவி செய்த நபர்கள் நேற்றைய தினம் கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி தற்கொலை செய்துகொண்ட தினேஷ் குமாரின் தந்தை போஜனிடம் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று தற்போது தற்கொலை செய்து கொண்ட தினேஷ்குமாரின் சகோதரி ராதிகாவை அவர் பணியாற்றும் தனியார் பள்ளிக்கு சென்று அவரை அவர் வீட்டுக்கு அழைத்து வந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெறுவது மூலம் பலர், இந்த காவல்துறை விசாரணை வளையத்துக்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story