ரயில்வே ஸ்டேஷன்களில் வளர்ச்சி திட்டப் பணி; தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு
Nilgiri News, Nilgiri News Today- ரயில்வே ஸ்டேஷன்களில் வளர்ச்சித்திட்ட பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு செய்தார்.
Nilgiri News, Nilgiri News Today- நாடு முழுவதும் அதிக வருவாய், வரவேற்பு மற்றும் நகரங்களின் பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில் 1, 275 ரயில்வே ஸ்டேஷன்களில் புதிய நவீன வசதிகளை நீண்ட கால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக அம்ருத் பாரத் நிலையம் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இதன்படி ரயில்வே ஸ்டேஷனில் குறைந்தபட்சம் அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி, ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம், ரயில்வே ஸ்டேஷனின் வடிவமைப்பு, இலவச வைபை வசதி, காத்திருப்போர் அறை, கழிப்பிட மேம்பாடு, சுகாதாரம், ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நீண்டகால தேவையின் அடிப்படையில் புதிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சேலம் ரயில்வே கோட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் உள்பட 15 ரயில்வே ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஊட்டி, குன்னூர் ரயில்வே ஸ்டேஷன்களில் நவீன வசதிகள் மேம்படுத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில் இந்த பணிகளை ஆய்வு செய்ய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங், ஊட்டி மற்றும் குன்னூர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு நேற்று மதியம் வந்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், அம்ருத் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் குன்னூர் ரயில்வே ஸ்டேஷன் ரூ. 7 கோடியிலும் மற்றும் ஊட்டி ரயில்வே ஸ்டேஷன் ரூ. 8 கோடியிலும் சீரமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை 6 மாதத்திற்குள் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஊட்டி மற்றும் குன்னூர் ரயில்வே ஸ்டேஷன்களில் நுழைவுவாயில், வெளியேறும் வாயில் என தனித்தனி பகுதிகள் கட்டப்பட உள்ளது. ரயில்வே ஸ்டேஷன் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். பயணிகள் காத்திருப்பு அறை மாற்றப்பட்டு அங்கு தொலைக்காட்சி பொருத்தப்படும். ஊட்டி மலை ரயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகாரம் பெற்று உள்ளதால், மற்ற ரயில்வே ஸ்டேஷன்களை போல் அல்லாமல் ஊட்டி, குன்னூர் ரயில்வே ஸ்டேஷன்களில் பாரம்பரியம் மாறாமல் இந்த பணிகள் நடக்க உள்ளது கூடுதல் சிறப்பு அம்சமாகும், என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu