நீலகிரி; பச்சை தேயிலை (கிலோவுக்கு) ரூ.33 வழங்க கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

நீலகிரி; பச்சை தேயிலை (கிலோவுக்கு) ரூ.33 வழங்க கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்
X

Nilgiri News, Nilgiri News Today- உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். 

Nilgiri News, Nilgiri News Today-பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 வழங்க கோரி, விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Nilgiri News, Nilgiri News Today- பச்சை தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி, பொரங்காடு சீமை நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமையில், கோத்தகிரி அருகே நட்டக்கல் கோவில் மைதானத்தில் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

2-வது நாளான நேற்று உண்ணாவிரத போராட்டத்தை சுண்டட்டி ஊர் தலைவர் ரவி, கொட்டநள்ளி ஊர் தலைவர் போஜகவுடர், பூசாரிகள் கும்பநஞ்சன், ரங்கசாமி, நஞ்சன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பெண்கள் உள்பட சுண்டட்டி, கொட்டநள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் கையில் தேயிலை கொழுந்துகளை ஏந்தியவாறு போராட்டத்தில் பங்கேற்றனர்.

கொள்முதல் விலை போராட்டக்குழுவின் தலைவர் தியாகராஜன் கூறியதாவது,

4 கிலோ பச்சை தேயிலையை கொண்டு ஒரு கிலோ தேயிலைத்தூள் தயாரிக்க ரூ.35 செலவாகிறது. தற்போதைய கொள்முதல் விலைப்படி 4 கிலோ தேயிலைக்கு ரூ.60 என்றால், ஒரு கிலோ தேயிலைத்தூளுக்கு ரூ.95 செலவாகிறது. இந்நிலையில் ஒரு கிலோ தேயிலைத்தூள் கடந்த வாரம் ரூ.90-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள், தேயிலை தொழிற்சாலைகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

ஒரு கிலோ தேயிலைத்தூள் மூலம் 250 கோப்பை தேநீர் தயாரிக்கலாம். ஒரு கப் தேநீர் ரூ.10 முதல் ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஒரு தேநீர் கோப்பைக்கு செலவாகும் தேயிலைத்தூளின் செலவு 9 பைசா மட்டுமே. தற்போது பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.33 வழங்க கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அதாவது 9 பைசாவிற்கு பதிலாக, 16 பைசாவாக வெறும் 7 பைசா மட்டுமே அதிகரித்து வழங்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர் .உண்ணாவிரதப் போராட்டம்

தொடர் உண்ணாவிரத போராட்டம் என்பதால், 120 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஊரும் தனித்தனியாக பங்கேற்க உள்ளனர். முதல்நாள் போராட்டத்தில் ஒரசோலை பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். இதுதவிர, ஊட்டி பகுதியில் நஞ்சுநாடு, இத்தலர் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரியில் உண்ணாவிரத போராட்டம் காரணமாக அனைத்து கிராமங்களிலும் வசிக்கும் விவசாயிகள் தேயிலை பறிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !