நீலகிரி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு
கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணை தொகை வழங்குவதற்கு https://serviceonline.gov.in/tamilnadu/directApply.do?serviceId=751 என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, மாவட்டத்தில் அமைக்கப்பட்ட இறப்பை உறுதி செய்யும் குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 642 மனுக்கள் பெறப்பட்டு, 460 பேருக்கு ரூபாய் 50,000 வீதம் நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 131 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.
51 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி 20.03.2022-க்கு முன்னர் கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 60 நாட்களுக்குள் (18.05.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காணவேண்டும்.
மேற்கண்ட காலக்கெடுவுக்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதி அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும். எனவே, கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய காலத்தில் மனு அளித்து நிவாரணம் பெற்று பயனடையலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu