ஊட்டியில் தேர்தல் விதிமுறை ஆலோசனை கூட்டம்

நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்த விளக்க ஆலோசனை கூட்டம் கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு முதல், வாக்கு எண்ணும் நாள் வரை என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கட்சி பிரமுகர்கள் இடையே கூறினார்.
மேலும் பொதுக்கூட்டங்கள் பேரணிகள் உட்பட கட்சி சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி ., ஆர்டிஓ உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu