நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று

நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று
X

இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்ன சென்ட் திவ்யாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தார். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தி, 18 வயதுக்கு மேல் தகுதி வாய்ந்த அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்தார்.

ஊட்டி அருகே கேத்தி தனியார் பள்ளியில் சிலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த பள்ளியில் படித்து வரும் கலெக்டரின் மகனுக்கு கொரோனா உறுதியானது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். மகனுக்கு பாதிக்கப்பட்டதால் கலெக்டருக்கும் தொற்று பாதித்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

உடனே, சுகாதாரக்குழுவினர், பங்களாவுக்கு சென்று கலெக்டரிடம் மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் பங்களாவில் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார்.

அவர், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் பாதிப்பு அதிகமாக இல்லை. சில நாட்கள் தனிமையில் இருந்து பின்னர் தொற்று பாதிப்பு இல்லை என்ற முடிவுக்கு பின்னர் பணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!