கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் யானை தாக்கி பெண் உயிரிழப்பு

கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் யானை தாக்கி பெண் உயிரிழப்பு
X

சிவநஞ்சம்மாள். 

கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் யானை தாக்கி பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே கோழிப்பண்ணை பகுதியில் ஆற்றங்கரையோரம் இன்று கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த சிவநஞ்சம்மாள் என்பவரை காட்டு யானை ஒன்று தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறையினர் யானை தாக்கி இறந்த பெண்மணியின் உடலை கைப்பற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வனப்பகுதிகளில் அதிகமான வறட்சி நிலவுவதால் தண்ணீரைத் தேடி வந்த காட்டு யானை ஒன்று பெண்மணியை தாக்கிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி