நீலகிரி முதுமலை சாலையில் உலா வரும் காட்டெருமை செந்நாய் கூட்டங்கள்
சாலையில் சுற்றி திரியும் செந்நாய்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் மற்றும் அரியவகை பறவைகள் இனங்கள் உள்ளன.
இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் அவ்வபோது வனவிலங்குகள் சாலையை கடந்து செல்லும். இதில் உதகையிலிருந்து மசினகுடி செல்லும் சாலையில் உள்ள மாவனல்லா பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட செந்நாய் கூட்டம், காட்டெருமை சாலையை வேகமாக கடந்து சென்றன. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆர்வ கோளாறால் செல்போன்களில் படம் பிடித்தனர் .
மாலை நேரங்களில் அதிகமான வன விலங்குகள் சாலையை கடக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தவோ புகைப்படங்கள் எடுக்கவோ கூடாது எனவும் மீறினால் அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu