கூடலூரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள், அச்சத்தில் பொது மக்கள்

கூடலூரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள், அச்சத்தில் பொது மக்கள்
X

கூடலூரில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகளுடன் வனத்துறையினர் களம் இறங்கியுள்ளனர்.

கூடலூர் அருகே தேவாலா, பொன்னானி பகுதிகளில் உலாவும் காட்டு யானைகளை விரட்ட, 3 கும்கி யானைகளுடன் 2 நாட்களாக தீவிர பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கூடலூர் அருகே தேவாலா பொன்னானி பகுதிகளில் கடந்த வாரம் இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து கடைகள் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்தி வந்தது.


இதையடுத்து காட்டு யானைகளை விரட்ட முதுமலை யானைகள் முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகள் அப்பகுதிக்கு விரைந்தன.

கடந்த இரண்டு நாட்களாக காட்டு யானைகளை கண்காணித்து விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்ட நிலையில் காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.



இதையடுத்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது நிச்சயமாக காட்டு யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என வனத்துறையினர் பொதுமக்களிடையே கூறியுள்ளனர். மேலும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!