கூடலூரில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்

கூடலூரில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்
X

வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள் 

கூடலூர் பாடந்துறை பகுதியல் இரவில் புகுந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில் இரவில் புகுந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியது இதில் காயமடைந்த இருவர் கூடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில் கடந்த ஒருவாரமாக அரிசி ராஜா என்ற காட்டு யானை குடியிருப்புகளையும் விளைநிலங்களையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி கோரிக்கை வைத்து வரும் நிலையில் மீண்டும் குடியிருப்புகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானையால் கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் பாடந்துறை கைம கொல்லி பகுதியில் இரவில் புகுந்த காட்டுயானை அங்கிருந்த இரண்டு வீடுகளை சேதப்படுத்தி உணவு பொருட்களை சூறையாடியது இதில் வீட்டில் இருந்தவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர் அவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அரிசி ராஜா காட்டு யானை அதே பகுதியில் உலா வருவதால் வனத்துறையினர் யானையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!