குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்

குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்
X
கூடலூர் தேவாலா பகுதியில் இரவு குடியிருப்பு பகுதியில் புகுந்த யானை கூட்டம் கடைகளை சேதப்படுத்தியது இதனால்கிராமமக்கள்அச்சம்.

தேவாலா பகுதியில் உள்ள அரசு தேயிலை தோட்ட குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் கடைகள் மற்றும் வீட்டை உடைத்து சேதப்படுத்தி இருக்கிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா பகுதியில் இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் அட்டி பகுதிக்குள் புகுந்த இரண்டு யானைகள் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றை தாக்கி சேதப்படுத்தியது.

வீட்டில் இருந்து 5 பேர் அதிர்ஷ்டவசமாக வெளியேறி உயிர் தப்பினர். இந்த நிலையில் அதே காட்டு யானைகள் மீண்டும் இரவு தேவாலா பகுதியில் உள்ள அரசு தேயிலை தோட்ட குடியிருப்புக்குள் நுழைந்து. அங்குள்ள சதீஷ் குமார் என்பவரது கடையை உடைத்த யானைகள் கடையின் உள்ளே இருந்து அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வெளியே எடுத்து போட்டு உண்டு சேதப்படுத்தியது.

மேலும் அதே பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் கதவுகளையும் உடைத்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் 2 யானைகளையும் விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் வனத்துறையினரின் வாகனத்தை திருப்பி விரட்டிய யானைகள் அங்கிருந்து செல்ல மறுத்தது.மேலும் அங்கிருந்து செல்ல மறுத்து கடையில் இருந்து எடுத்த உணவுப் பொருட்களை தின்றவாறு அங்கே நின்றது.பின்னர் ஒருவழியாக யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

தொடர்ந்து யானைகள் அதே பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!