கூடலூரில் காட்டு யானை மீண்டும் அட்டகாசம்: கிராம மக்கள் அச்சம்

கூடலூரில் காட்டு யானை மீண்டும் அட்டகாசம்: கிராம மக்கள் அச்சம்
X

கூடலூர் அருகே பள்ளியின் சுற்றுச் சுவரை உடைத்து சமையலறையை சேதப்படுத்திய காட்டு யானை அங்கிருந்த அரிசியை சூறையாடி சென்றது.

தொடர்ந்து காட்டு யானை நடமாட்டத்தால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்

கூடலூர் அருகே பள்ளியின் சமையலறையை சேதப்படுத்திய காட்டு யானை.

கூடலூர் சுற்றுப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது கடந்த இரண்டு நாட்களாக அரிசி ராஜா என்ற காட்டு யானை விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. காட்டு யானையை விரட்ட கிராம மக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதியில் பள்ளியின் சுற்றுச் சுவரை உடைத்து சமையலறையை சேதப்படுத்திய காட்டு யானை அங்கிருந்த அரிசியை சூறையாடி சென்றது.

உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து யானை நடமாட்டம் அப்பகுதியில் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!